கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றால் ஏற்படும் அபாயங்கள் (UTI)

 

உண்மையில் UTI என்றால் என்ன?

சிறுநீர் பாதை நோய்த்தொற்று அல்லது UTI என்பது சிறுநீரக அமைப்பின் எந்தவொரு பகுதியிலும்  (அது சிறுநீர்க்குழாய்கள், சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகம்)  ஏற்படும் தொற்றுநோயாகும். ஆண்களை விட பெண்கள் சிறுநீர் தொற்றுக்கு ஆளாகிறார்கள் என்றாலும், கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இது மிகவும் பொதுவானது.

நீங்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது, சிறுநீர்ப்பையில் இறங்கு அழுத்தத்திற்குள் உங்கள் கரு வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது, ​​பெரினியல் தொற்றுநோயை சார்ந்த சிறுநீர் கசிவுகளை நீங்கள் அனுபவிக்கலாம்.

 குறுகிய சிறுநீர்க்குழாய் (பொதுவாக 3-4 செ.மீ) அல்லது ஏற்கனவே  விரிவான கர்ப்பிணி பெண்ணின் வயிறு காரணமாக, சுகாதாரத்தில் ஏற்படும் அசௌகரியம் சிறுநீர் பாதையில் எற்படும் நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும்.

கர்ப்ப காலத்தில் UTI ஆபத்தானதா?

2-10% கர்ப்பிணிப் பெண்களிடையே UTIகள் ஏற்படுகின்றன, இது குறைப்பிரசவத்திற்கு வழிவகுக்கும். கடுமையான UTIகள் உறுப்புகளுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும். சிறுநீர் தொற்றுடன் கூடிய பிரசவம், தாய் மற்றும் சேய் இருவரையும் பாதிக்கும்.

கர்ப்ப காலத்தில் UTI- யினால் ஏற்படும் அபாயங்கள்:

கர்ப்பத்தில் இருக்கும் பெண்கள் அதிகப் படியன ஹார்மோன்களும், அத்துடன் சிறுநீரில் அதிகப்படியான சர்க்கரை மற்றும் புரதங்களை கொண்டு உள்ளவர்களாக இருப்பர்; இந்த மாற்றங்கள் அவர்களுக்கு நோய்த்தொற்றின் ஆபத்தை அதிகப்படுத்துகிறது.

இவை மட்டும் அல்லாது, சிறுநீரகங்களுக்கு சிறுநீர் மீண்டும் பாயும் ஒரு ரிஃப்ளக்ஸ் நிலை UTIக்கு வழிவகுக்கிறது.

மேலும் இந்த நிலையை மோசமாக்குவதற்கு, விரிவடையும் கர்ப்பிணி வயிறு சருமம் மற்றும் உங்கள் இரைப்பைக் குழாயில் அமர்ந்திருக்கும் குடல் பாக்டீரியாக்களின் மூலமாக உங்கள் சிறுநீர் பாதையில் UTI ஏற்படுத்துவதை எளிதாக்குகிறது.

கர்ப்ப காலத்தில் அதிக பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு அதிக அளவில் UTI ஏற்பட வாய்ப்புள்ளது.

நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்று உங்களுக்குத் தெரியுமா? UTI-யின் அறிகுறிகள் பின்வருமாறு:

1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்.

2. சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு.

3. காய்ச்சல்.

4. கீழ்முதுகு வலி.

5. மேகமூட்டமாக தோன்றும் சிறுநீர் அல்லது சிறுநீரில் துர்நாற்றம்.

6. குமட்டல் மற்றும் வாந்தி.

UTI-யை தடுக்க நாம் என்ன செய்ய முடியும்?

குணப்படுத்துவதை விட, வருமுன் காப்பதே சிறந்தது.

1. உங்களுக்கு தாகம் வரும் வரை காத்திருக்க வேண்டாம், அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்.

2. அசுத்தமான பொது கழிப்பறைகளின் பயன்பாட்டை தவிர்க்கவும்.

3. ஈரப்பதம் இல்லாமல் அந்தரங்க பகுதியை பராமரிக்கவும்; ஈரப்பதம் அதிக கிருமிகளுக்கு வழிவகுக்கும்

4. உங்கள் சிறுநீரை முழுவதுமாக வெளியேற்றி, சிறுநீர்ப்பையை சுத்தமாக வைத்திருக்கவும்.

5. நீங்கள் சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தால், உடனடியாக சிறுநீர் கழிக்கவும்

6. அந்தரங்க பகுதியில் வேறு எந்த தேவையற்ற பொருட்களையும் பயன்படுத்த வேண்டாம், அவை pH ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவதோடு நோய்த்தொற்றுகளையும் உண்டாக்கும்.

7. உங்கள் பிறப்புறுப்புகளை சுத்தமாக வைத்திருங்கள்.

8. மகப்பேறு சுகாதார உள்ளாடைகளை அணியுங்கள்.

மகப்பேறு சுகாதார உள்ளாடைகள் என்றால் என்ன?

Morph Maternity – யின் மகப்பேறு சுகாதார உள்ளாடைகள் ஒரு சிறப்பு துணியால் தயாரிக்கப்படுகின்றன, இது அந்தரங்க பகுதியில் எற்படும் 99% நோய்த்தொற்று ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கிறது.  இந்த சிறப்பு துணி பூஞ்சை, பாக்டீரியா,  ஆண்டிமைக்ரோபியல் போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் வாய்ந்தது. இதன் துர்நாற்றம் எதிர்ப்பு மற்றும் ஈரப்பதம் மேலாண்மை தொழில்நுட்பம், பகல் மற்றும் இரவுகளில்  உங்களை சுத்தமாகவும் உலர்வாகவும் இருக்க உதவுகிறது.

இப்பொழுதே சிறப்பு விலையில் ஆர்டர் செய்யுங்கள்.
Facebook Comments

Related posts